எத்தனை நாட்களுக்குதான் ஆண் பெண் சுதந்திரம் பற்றி பேசுவது : த்ரிஷா கேள்வி!

எத்தனை நாட்களுக்குதான் ஆண் பெண் சுதந்திரம் பற்றி பேசுவது : த்ரிஷா கேள்வி!
இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஆண்இ பெண் சுதந்திரம் பற்றி பேசிக்கொண்டிருப்பது என நடிகை த்ரிஷா கேள்வியெழுப்பியுள்ளார்.
அதற்கும் மேல் பேசவும்இ சிந்திக்கவும் நிறைய விடயங்கள் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சினிமா அனுபவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்இ சினிமாவில் ஆண்இ பெண்ணுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்இ சுதந்திரம் போன்று இரு பாலருக்கும் எல்லாமே அவர்கள் வளரும் விதத்திலும் சூழ்நிலையிலும் அமைகிறதுஇ சுற்றி உள்ளவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் பெண் சுதந்திரம் என்று பழங்கதை பேசிக்கொண்டு இருப்பது வெட்டி வேலை.
வரும் காலத்தில் நமக்கு சுதந்திரம் இருக்குதோ இல்லையோஇ தண்ணீர் இருக்காது. மலைகள் இருக்காதுஇ காடுகள் அழிந்து போகும் நிலை. பனி மலைகள் உருகி வருகின்றன. சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்குமா என்பது சந்தேகம்.இப்படி இயற்கை பேரழிவைப் பற்றி கவலைப்பட நமக்கு இதுதான் சரியான நேரம் என்றும் அவர் கூறியுள்ளார்.


ஆசிரியர் - Editor II