1000

200இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்!

200இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை பதுங்கி இருப்பதாகவும்இ பாகிஸ்தானும்இ எல்லை தாண்டி பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி வைக்க முயன்று வருவதாகவும் அம்மாநில பொலிஸ் உயர் அதிகாரி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர்இ
'பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கில்இ எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றார்.
பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கையால்இ தற்போது ஜம்முஇ மற்றும் கார்கில் ஆகிய பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருகின்றது' என்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து அம்மாநிலத்தில் பாரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயன்று வருவதாக இந்திய பாதுகாப்பு தரப்பு தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor II