1000

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி!

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளார்.
ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் திரைப்படமாகிறது. தமிழில் 'தாம்தூம்' படத்தில் கதாநாயகியாக வந்த பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.
கதாபாத்திரத்துக்காக அவர் பரதநாட்டியம் மற்றும் தமிழ் கற்று வருகிறார். இத்திரைப்படத்தினை ஏ.எல்.விஜய் இயக்குகின்றார்.
இந்த படம் தமிழ்இ தெலுங்குஇ ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.
ஹிந்தி பதிப்புக்கு 'ஜெயா' என்று தலைப்பு வைத்தனர். ஆனால் கங்கனா ரணாவத் பெயரை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் ஹிந்தியிலும் தலைவி பெயரிலேயே தயாராகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்இ நடிகைகள் தேர்வு நடைபெற்றுள்ளது.
எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
இவர் ரோஜாஇ பம்பாய் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். படத்துக்கான திரைக்கதையை விஜயேந்திரபிரசாத் எழுதுகிறார்.
பாகுபலி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதி இருந்தார். விஷ்ணு இந்தூரிஇ சைலேஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஆசிரியர் - Editor II