உண்மையான வின்னர் இலங்கை பெண் லொஸ்லியா தான்!

உண்மையான வின்னர் இலங்கை பெண் லொஸ்லியா தான்!
லொஸ்லியாவை கீழ் தரமாக விமர்சிக்கும் என்னொடு உள்ள முக நூல் நண்பர்களை அகற்ற முடிவு செய்யதுள்ளதாக சமூக ஆரவலர் ஒருவர் அவரது முகநூல் புத்தகத்தில் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.
எனக்கு லொஸ்லியாவையோ அல்லது லொஸ்லியாவுக்கு என்னையோ தெரியாது. அத்தனை பேரும் அவருக்கு சேறு பூசக் காரணம் ஒரு பெண் என்பதால்தான்.
அதிலும் இலங்கை தமிழ் பெண் என்பதால்தான். அதிகமாக அவருக்கு சேறு பூசுவோர் இலங்கையர்கள்தான். அந்த மன நிலையில் உள்ளவர்களோடு பயணிக்க தேவையில்லை என நினைக்கிறேன். விமர்சிப்பது என்பது ஒன்று. ஆனால் நடப்பது அதுவல்ல. மன நிலையாக எந்தவொரு பெண்ணுக்கும் தலை தூக்க விடாத மனப்பாங்கு மற்றும் பொறாமை.
எல்லோரும் ஐஸ்வரியாக்களும் இல்லை. எல்லோரும் சாவித்திரிகளும் இல்லை. ஆனால் எல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கவே செய்யும். கலைஞர்களாக அடியெடுத்து வைப்போர் கடவுள்கள் இல்லை. அவர்களும் சாதாரண மக்களே.
இதை வளர விட்டால் இது ஏனைய பெண்கள் குறித்தும் தொடரவே செய்யும். இந்நிலையில் இவ்வாறு செயல்பாடும் நணபர்களை தான் மூக நூலில் இருந்து அகற்றுவதாக சமூக ஆரவலர் ஒருவர் தெரிவித்து இருந்தார். அதையே நானும் பின்பற்றுவதாக குறித்த கருத்தினை பதிவு செய்தவர் தெரிவித்துள்ளார்.
மேலும்இ கீழே உள்ளது இன்னொருவர் எழுதியது
எந்த அடிப்படையான செல்வாக்கும் இல்லாமல் கிளிநொச்சியிலிருந்து ஒரு இளம்பெண்ணாய் அங்கு இருக்கிற செல்வாக்கு படைத்தவர்களோடு போட்டி போடுறது சாதாரணமில்லை.
அழகிலும் உடை உடுத்துவதிலும் அவர்களுக்கு இணையாக வலம் வருகிறார் இலங்கையர்களை குறைத்து மதிப்பிடவேண்டாம் என்று அடித்து சொல்லியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் காணொளிகளை மொத்தமா பாத்தா லொஸ்லியாதான் அதிக நேரம் காண்பிக்கப்பட்டிருப்பா உண்மையிலேயே வின்னர் லொஸ்லியாதான்.
இலங்கை தமிழருக்கு என்ன மரியாதை குறைஞ்சுபோச்சு புரியவே இல்லை. எனவும் ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் இவ்வகையான கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.
ஆசிரியர் - Editor II