பாடசாலை பேருந்து குடைசாய்ந்து விபத்து – 31 பேர் படுகாயம்!

பாடசாலை பேருந்து குடைசாய்ந்து விபத்து – 31 பேர் படுகாயம்!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 31 பேர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த பாடசாலை பேருந்து ஒன்று எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்கும்போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் பேருந்து சாரதி உட்பட 31 பேர் காயமடைந்த நிலையில்இ டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமமைந்தவர்களில் 28 பேர் மாணவஇ மாணவிகள் எனவும்இ 3 பேர் பெரியவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிஇ ஹைலவல் பாடசாலைஇ வெப்ஸ்டார் பாடசாலைஇ பொஸ்கோ பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவஇ மாணவிகளே இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் - Editor II