1000

முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!

முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல் குறித்து முறைப்பாடு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு அவசர சேவையின் தொலைபேசி இலக்கங்களை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு அறிமுகம் செய்திருக்கிறது.
இதன்படி தேர்தல் பிரச்சாரங்களின் போது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல் தொடர்பான முறைப்பாடுகளை 076-3223662  ,0763223448 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அறிவிக்க முடியம்.
அத்துடன் வோ pppr@tisrilanka.org  என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவும் தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்இ  தேர்தர்கள் ஆணைக்குழுவால் வேட்பாளர்களுக்கு கடும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor II