சஜித்தின் அறிவிப்பாள் மகிழ்ச்சியில் மக்கள்!

சஜித்தின் அறிவிப்பாள் மகிழ்ச்சியில் மக்கள்!
அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் தனது மாதாந்த கொடுப்பனவை மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
45 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தினசரி 900 ரூபாய் என்ற ஊதியத்தில் தப்பிப் பிழைக்கின்றனர் என கூறினார்.
எனவே வறுமையை ஒழிப்பதற்கும் ஏழைகளுக்கு தன் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் தனது மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நன்கொடையாக அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.
மேலும் நாட்டின் வருவாயில் பெரும் பகுதியால் பயனடைவது பணக்காரர்கள்தான் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டின் வருமானத்தில் ஐந்து சதவிகிதம் மட்டுமே ஏழைகளால் பயன்படுத்தப்படுகிறது.
அத்தோடு இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை வரலாற்றில் எந்த ஒரு ஜனாதிபதியும் வழங்காத உத்தரவாதத்தை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிவித்திருப்பது மக்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் - Editor II