1000

14 இங்கிலாந்து ரசிகர்கள் கைது!

14 இங்கிலாந்து ரசிகர்கள் கைது!
'யூரோ 2020' கால்பந்து தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டியொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பராகுவேயில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது குழப்பம் விளைவித்த 14 இங்கிலாந்து ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்இ அவர்களில் 14 இங்கிலாந்து ரசிகர்கள் அடங்குவதாகவும் பராகுவே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செக் குடியரசு மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நேற்றிரவு 8.45 மணிக்கு போட்டி இடம்பெற்றது. இதற்கென 3800 டிக்கெட்டுக்களை இங்கிலாந்து ரசிகர்கள் கொள்வனவு செய்திருந்தனர்.
இந்தப் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியடைந்திருந்தது.
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஏழு மணியளவில் இங்கிலாந்து ரசிகர்கள் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் மீது போத்தல்களை வீசினர்.
இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் பலர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.


ஆசிரியர் - Editor II