தாக்குதல் நடத்த அரசாங்கமே ஆயுதம் தந்தது- ஹிஸ்புல்லா...!

தாக்குதல் நடத்த அரசாங்கமே ஆயுதம் தந்தது- ஹிஸ்புல்லா...!
மட்டக்களப்பில் 1990இல் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலின் போதுஇ அரசாங்கம் தந்த ஆயுதங்களை கொண்டும்இ பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்தும் முஸ்லிம்களை பாதுகாத்தோம் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார் .
நேற்று காத்தான்குடியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
விடுதலைப்புலிகள்இ முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்றபோதுஇ அரசாங்கம் தந்த ஆயுதங்களை கொண்டும்இ பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்தும் மட்டக்களப்பில் முஸ்லிம்களை பாதுகாத்த்தாகவும் அதனால் தான் ஆகவேதான் இன்றும் இந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முஸ்லிம்களிடம் 16 இலட்சம் வாக்குகள் உள்ளதாக கூறிய அவர்இ 2015இல் 12இலட்சம் வாக்குகளை மைத்திரிக்கு அளித்ததாகவும்இ ஆனால் 1 இலட்சம் வாக்கைத்தான் மஹிந்தவிற்கு அளித்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2015இல் பெரும்பாலான2.5 இலட்சம் வாக்குகளை கொடுத்து நன்மைகளை பெற்ற நாம்இ 2015இல் மைத்திரிஇ ரணிலுக்கு 12 இலட்சம் வாக்குகளை கொடுத்து பெற்ற நன்மைகள் என்ன?
19வது திருத்தம் வந்தால் நாட்டிக்கு கேடுஇ பாரிய அச்சுறுத்தல் என நாம் சொன்னபோதும்இ அதனை கொண்டு வந்தார்கள் எனவும் குறிப்பிட்ட ஹிஸ்புல்லா இன்று ஜனாதிபதி உள்ளிட்ட எல்லோரும் 19வது திருத்தம் தவறு என சொல்கிறார்கள்என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் குண்டுகள் வெடித்தமைக்கு 19வது திருத்தம்தான் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு நாட்டின் பிரதமரை அழைக்காமல்இ பொலிஸ்மா அதிபரை அழைக்காமல் பாதுகாப்புசபை கூட்டத்தை கூட்டினால்இ அது நாடா? எனக்கேள்வி எழுப்பிய அவர் 19வது திருத்தத்தினால் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சஜித்தோஇ கோத்தபாயவோ யார் ஜனாதிபதியாக வேண்டுமென்றாலும் முஸ்லிம் வாக்கில்லாமல் யாரும் ஜனாதிபதியாக முடியாது என்றும் ஹிஸ்புல்லா கூறியுள்ளார்.
கடந்தமுறை நானும் மைத்திரியை ஆதரித்திருந்தால்இ நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றிருப்பேன் எனக்கூறிய அவர் இஆனால்இ அரசியலென்பது பதவிகளல்ல. மக்களிற்கு வழிகாட்டுவது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தலில் வென்று வந்த அமீர் அலிஇ ஹரீஸ் போன்றவர்கள் பிரதியமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்ய பின்வரிசையில் உட்கார்ந்திருக்கஇ இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்ய அல்லா தன்னை முன்வரிசையில் உட்கார வைத்ததாகவும் ஹிஸ்புல்லா கூறியுள்ளார்.
ஏப்ரல் தாக்குதல் பற்றி எச்சரிக்கை வந்தபோது ஜனாதிபதிஇ பிரதமர்இ பாதுகாப்பு செயலர் படுத்துறங்கி விட்டுஇ இப்பொழுது சஹ்ரானை தெரியுமா என தன்னிடம் கேள்வி கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளில் மிக மூத்தவன் தான்தான் எனக்கூறிய ஹிஸ்புல்லாஇ பெளசி ஹாஜியார்இ ரஊப் ஹக்கீம் எல்லோரும் தனக்கு பின் பாராளுமன்றம் சென்றவர்கள்தான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் யாருக்காவும் போட்டயிடவில்லை எனக்கூறிய ஹிஸ்புல்லாஇ முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கவே நான் போட்டியிடுகிறேன். 30 வருடம் அரசியலில் இருந்த தனக்கு ஜனாதிபதியாகும் எண்ணம் எனக்கில்லை என்றும் கூறிய அவர் இ சஜித் வந்தாலும் கோத்தா வந்தாலும் பவர்புள்ளான கபினட் அமைச்சை பெறும் ஆற்றல்இ சக்திஇ அறிவு தன்னிடமிருக்கிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்கை பெற வாய்ப்பில்லாத படியால்இ இரண்டாவது விருப்பு வாக்கை வைத்து முஸ்லிம்களிற்காக பேரம் பேசலில் ஈடுபடுவோம் என்றும் அதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
மேலும் நவம்பர் முதலாம் திகதி வரை ஒட்டகத்திற்கு வாக்களிக்குமாறு தாம் பிரச்சாரம் செய்வோம் என்றும் அதன் பின்னர் 2 ஆம் விருப்பு வேட்பாளர் யாரென்பதை நாம் மக்களுக்கு அறிவிப்போம் எனவும் ஹிஸ்புல்லா இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II