அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும் – மஹிந்த!

அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும் – மஹிந்த!
தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தி மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய முறையற்ற அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குளியாப்பிடிய நகரில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்இ 'எமது ஆட்சியில் பாரிய போராட்டத்தின் மத்தியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இன்று அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தியுள்ள தேசிய பாதுகாப்பு மீண்டும் பலப்படுத்தப்படும்.
நாட்டுக்க வருமானத்தை ஈட்டும் அபிவிருத்திகளை மாத்திரம் நிர்மாணித்தோம். துறைமுகம்இ அபிவிருத்திகள் அனைத்தும் தேசிய வருமானத்தை ஈட்டும் விதமாக காணப்பட்டது.
ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து தேசிய வளங்கள் அனைத்தும் பிற நாட்டவருக்கு விற்கும் முயற்சிகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது.
நாட்டை விற்கும் சட்டத்தை தவிர்த்து ஏனைய சட்டங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் - Editor II