பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வறுமையை சுயதொழில் ஊடாக போக்க வேண்டும்- சரவணபவன்!

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வறுமையை சுயதொழில் ஊடாக போக்க வேண்டும்- சரவணபவன்!
வடக்கு, கிழக்கிலுள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள்இ தமது வறுமையை போக்குவதற்கு சுயதொழில் ஊடாக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையும் கைத்தொழில் திணைக்களமும்இ நியு ஏரோ தொண்டு நிறுவனமும் இணைந்து தொழில் வாய்ப்புகளற்றிருக்கும் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தோடு மட்டக்களப்பு மாநகர பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் கைத்தறி தொழிற்பயிற்சி நிலையமானது  நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தி.சரவணபவன் மேலும் கூறியுள்ளதாவதுஇ 'வடக்குஇ கிழக்கு மாகாணங்களிலுள்ள பெண் பிள்ளைகள் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் தமது குடும்ப வறுமை நிலையினைக் கருத்தில் கொண்டு தமக்கென ஓர் தொழிலைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள்.
இத்தகையவர்களுக்குஇ எதிர்காலத்தில் நிலையான ஓர் வருமானத்தினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஓர் சுய தொழிலினை வழங்க வேண்டியது  சமூகப் பொறுப்புமிக்கவர்களின் பிரதான கடமையாகும்.
இதன் காரணமாகவே  கைத்தொழில் திணைக்களத்தோடும்இ நியு ஏரோ பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தோடும்இ ஆதித்தியா கைத்தறி நிறுவனத்தினரோடும் இணைந்து மேற்படி கைத்தறி பயிற்சி மையத்தினையும் அத்தோடு இணைந்த தொழில் வாய்ப்பு நிறுவனத்தினையும் ஆரம்பித்துள்ளோம்.
மேலும் இத்தகைய கைத்தறி பயிற்சி நிலையத்தின் ஊடாக எமது சமூகத்தினை பொருளாதார ரீதியாக  மேம்படுத்தி தமிழர்களுக்கு என தனித்துவமான வியாபார நாமங்களையும் உற்பத்திகளையும்  இவ் வர்த்தக உலகில் முதன்மைப்படுத்த முடியும்.
அத்தோடு தொழில்களற்று இருக்கின்ற எமது சமுதாயத்தினரை சிறந்த ஒரு தொழில் முன்னேற்ற நகர்விற்கு கொண்டு செல்லும். இங்கு போதியளவான பாதுகாப்பும் உரிய கண்காணிப்பும் அமையப் பெறுவதுடன் இதற்கான கொடுப்பனவுகளை கைத்தொழிற் திணைக்களம் மற்றும் நியு ஏரோ அமைப்பினாலும் வழங்கப்படும்'  என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன்இ மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜாஇ மாவட்ட கைத்தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்இ ஆதித்தியா கைத்தறி நிறுவனத்தின் பணிப்பாளர் சுதாகரன்இ நியு ஏரோஇ எமது சமுகம் ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கைத்தறி பயிற்சியினை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் பயிற்சிநெறியினை வழங்கும் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் - Editor II