டிசம்பரில் உள்ளூராட்சி தேர்தல் – பழனிசாமி உறுதி!!

டிசம்பரில் உள்ளூராட்சி தேர்தல் – பழனிசாமி உறுதி!!
டிசம்பர் மாதத்தின் இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தும்பூர் பகுதியில் பிரச்சார பணிகளில் ஈடுபட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்இ 'வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு நீதி மன்றத்தில் சமர்பிக்கப்பட்டப்பின்  இத்தேர்தல் நடத்தப்படும்.
பாஜகவுக்கு நாங்கள் அடிமையாக இருக்கிறோம் என தி.மு.க கூறுகிறது.  பாஜக ஆட்சியில் கூட்டணியில் தி.மு.க இருந்தபோதுஇ முரசொலி மாறன்  இலாக்கா இல்லாத அமைச்சராக  செயற்பட்டார்.  அப்போதுஇ பாஜக மக்கள் விரோத கட்சியாக தெரியவில்லையா' என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆசிரியர் - Editor II