மீண்டும் பொலிஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா!

மீண்டும் பொலிஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா!
நடிகர் ராணா தயாரிக்கும் தெலுங்கு படத்தில் நடிகை நயன்தாரா பொலிஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம்இ ஐராஇ மிஸ்டர் லோக்கல்இ கொலையுதிர் காலம் ஆகிய தமிழ் படங்களும்இ லவ் ஆக்ஷன் டிராமா என்ற மலையாள படமும்இ சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படமும் திரைக்கு வந்தன.
நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக தர்பார் படத்திலும் விஜய்யுடன் பிகில் படத்திலும் நடித்து முடித்துள்ளார். பிகில் தீபாவளிக்கும்இ தர்பார் பொங்கல் பண்டிகையிலும் வெளியாகிறது.
இந்த நிலையில் பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான ராணா தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளனர்.
இந்த படத்தில் கதையை கேட்டதும் நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளாராம். இதில் நயன்தாரா பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
எனினும் முதலில் கீர்த்தி சுரேஷை தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினர். ஆனால் படக்குழுவினர் கேட்ட திகதிகளை அவரால் ஒதுக்க முடியாததால் நயன்தாரவை தேர்வு செய்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகின்றது.
ஆசிரியர் - Editor II