வடமாகாண ஆளுனராக பேசல ஜயரத்ன நியமனம்

வடமாகாண ஆளுனராக பேசல ஜயரத்ன நியமனம்
வடமாகாண பதில் ஆளுனராகஇ வடமேல் மாகாண ஆளுனர் பேசல ஜயரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் நடக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன்இ செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் பயணம் செய்கிறார்கள். பத்து நாட்கள் அவர்கள் வெளிநாட்டில் தங்கியிருப்பார்கள்.
நாளை 19ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை பிரித்தானியாவில் தங்கியிருப்பார்கள். இதன் பின்னர் தனிப்பட்ட விடுமறையில் 23ம் திகதி முதல் 29ம் திகதி வரை கனடாவிற்கு செல்லவுள்ளனர்.
ஆளுனர் பத்து நாள் விடுமுறையில் வெளிநாடு செல்வதால்இ பதில் ஆளுனராக வடமேல் மாகாண ஆளுனர் பேசல ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுனரின் செயலாளரின் இடத்திற்குஇ பதில் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் - Editor II