மிகப் பெரிய மரக்கறிகளை உற்பத்தி செய்து கின்னஸ் விருதுகளைப் பெற்றார் ஜோ ஆதற்ரன்!

மிகப் பெரிய மரக்கறிகளை உற்பத்தி செய்து கின்னஸ் விருதுகளைப் பெற்றார் ஜோ ஆதற்ரன்!
ஜோ ஆதற்ரன் என்ற 64 வயதான நபர் தனது விவசாயப் பண்ணையில் மிகப் பெரிய மரக்கறிகளை உற்பத்தி செய்து கின்னஸ் விருதுகளைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் நொற்றிங்ஹம்ஷையர்இ மான்ஸ்ஃபீல்ட் – வூட்ஹவுஸில் வசிக்கும் ஆதற்ரனே இவ்வாறு உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
13 அடி 4 அங்குல அளவைக் கொண்ட மிகப்பெரிய கோசுக்கிழங்கு (Turnip) உற்பத்தி செய்ததன் மூலம் ஜோ ஆதற்ரன் தனது 12 வது கின்னஸ் உலக சாதனை விருதைப் பெற்றுள்ளார்.
இவ்வாறான மிகப்பெரிய விவசாய உற்பத்திகளை பயிரிட்டு வளர்ப்பதில் தான் அதிதீவிரமாக இருப்பதாகக் ஜோ ஆதற்ரன் கூறுகிறார்.
மிக நீளமான கரட்இ கனதியான லீக் மற்றும் பெரிய பாஸ்னிப் கிழங்கு (parsnip) மற்றும் பீற்றூட் ஆகியவற்றினைப் பயிரிட்டு சாதனைகளைப் படைத்துள்ளார்.


ஆசிரியர் - Editor II