போர்நிறுத்த ஒப்பந்தம்!

போர்நிறுத்த ஒப்பந்தம்!
துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் இருந்து குர்திஸ் படைகளை ஒதுக்கி வைப்பது தொடர்பான வரலாற்று ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு துருக்கியும் ரஷ்யாவும் இணக்கம் வௌியிட்டுள்ளன.
துருக்கி இந்த மாதம் குர்திஷ் படைகளை தங்கள் தெற்கு எல்லையிலிருந்து விரட்டுவதற்கு ஒரு இடைப்பட்ட மண்டலத்தை உருவாக்கும் வகையில் தாக்குதல்களை ஆரம்பித்தது.
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாட்டின் நட்பு நாடான ரஷ்யாஇ சிரியாவில் வெளிநாட்டு தலையீடு குறித்து கவனம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில்இ துருக்கியும் ரஷ்யாவும் எல்லைப் பகுதியில் இணைந்த கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா எதிர்பாராத வகையில் திடீரென படைகளை மீள பெறுவதாக அறிவித்ததையடுத்துஇ இந்த பிராந்தியத்தில் துருக்கி மற்றும் ரஷ்யா தமது செல்வாக்கை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
துருக்கியைப் பொறுத்தவரை குர்திஸ் படைகளிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளின் மீது தமது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதே முக்கிய நோக்கமாக உள்ளது.
ஆசிரியர் - Editor II