1000

சுவிஸில் டாக்ஸி சவாரி... 15,000 பிராங்குகளை இழப்பீடாக அளித்த இளைஞர்: வெளியான பின்னணி

சுவிஸில் டாக்ஸி சவாரி... 15,000 பிராங்குகளை இழப்பீடாக அளித்த இளைஞர்: வெளியான பின்னணி
சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் டாக்ஸி சவாரி மேற்கொண்ட இளைஞர் ஒருவர் 15இ000 பவுண்டுகள் அந்த சாரதிக்கு இழப்பீடாக வழங்க நேரிட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
சூரிச் மண்டலத்தின் றுäனநளெறடை பகுதியில் இருந்து ழுநவறடை பகுதிக்கு செல்ல கடந்த ஜூலை மாதம் இளைஞர் ஒருவர் டாக்ஸி ஒன்றை சவாரிக்கு அமர்த்தியுள்ளார்.
55 வயதான சாரதி ஒருவர் இந்த இளைஞரின் உதவிக்கு வந்துள்ளார். அவரிடம் பயண கட்டணம் எவ்வளவு என குறித்த இளைஞர் விசாரித்துள்ளார்.
அதற்கு அந்த சாரதி சுமார் 130 முதல் 150 பிராங்குகள் வரை ஆகலாம் என பதிலளித்துள்ளார்.
இதனிடையே தம்மிடம் அவ்வளவு தொகை இல்லை எனவும்இ செல்லும் வழியில் வங்கியில் இருந்து எடுத்துவருவதாக கூறி அந்த இளைஞர் சென்றுள்ளார்.
பணத்துடன் திரும்பி வந்து பார்த்தபோதுஇ ஏற்கனவே 80 பவுண்டுகள் கட்டணம் என காட்டியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் டாக்ஸியில் இருந்து பாதி வழியே வெளியேற முயன்றதுடன்இ கட்டணம் தர முடியாது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே அது கைகலப்பில் முடிந்துள்ளது. இருவரும் தாக்கிக்கொண்டதில் மூக்கில் இருந்து இருவருக்கும் ரத்தம் வெளியேறியுள்ளது.
மட்டுமின்றிஇ மது அருந்தி இருந்த அந்த இளைஞர்இ அந்த டாக்ஸியை ஆத்திரத்தில் சேதப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்இஇ மாவட்ட நீதிமன்றம் இருவரையும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர பணித்துள்ளது.
இதனையடுத்து அந்த இளைஞர் குறித்த சாரதிக்கு 15இ000 பிராங்குகள் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும்இ இருவரும் தாங்கள் அளித்துள்ள புகாரை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் முடிவானது.
ஆசிரியர் - Editor II