1000

காஷ்மீரின் துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு!

காஷ்மீரின் துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு!
காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக முறைப்படி பிரிக்கப்பட்ட நிலையில்இ அவற்றுக்கான துணைநிலை ஆளுநர்கள் பதவியேற்றுள்ளனர்.
இதன்படி  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை ஆளுனராக கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக ஆர்.கே.மாத்தூர் ஆகியோர் பதவியேற்றுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஓகஸ்டு மாதம் 5 ஆம் திகதி இரத்து செய்தது.
இதனையடுத்து குறித்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுஇ  நாடாளுமன்றத்தின்  இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில்இ காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II