1000

கடைசி தொலைபேசி பூத்துக்கு வந்த சோதனை!

கடைசி தொலைபேசி பூத்துக்கு வந்த சோதனை!
சுவிட்சர்லாந்தின் கடைசி தொலைபேசி பூத்தும் அகற்றப்பட உள்ளது. ஒரு காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே சொந்தமாக தொலைபேசி வைத்திருந்த நிலையில்இ பெரும்பாலான நாடுகளில்இ பொதுமக்களுக்காக தொலைபேசி பூத்கள் நிறுவப்பட்டன.
குறிப்பாக தங்கள் உறவினர்கள் யாராவது வெளிநாட்டில் இருக்கும் நிலையில்இ காத்திருந்து இந்த தொலைபேசி பூத்களிலிருந்து அவர்களை தொடர்பு கொள்ளும் காட்சிகள் சர்வசாதாரணமாக இருந்தது.
பின்னர் கைபேசி என்னும் மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் எல்லார் கைகளிலும் குறைந்த செலவில் மொபைல் போன்கள் நடமாட ஆரம்பிக்கஇ தொலைபேசி பூத்களின் மவுசு குறைய ஆரம்பித்தது.
அதனால்இ கொஞ்சம் கொஞ்சமாக தொலைபேசி பூத்கள் அகற்றப்பட ஆரம்பித்தன. தற்போது சுவிட்சர்லாந்தின் யுயசபயர மாகாணத்திலுள்ள டீயனநn நகரில் ஒரே ஒரு தொலைபேசி பூத் மட்டுமே உள்ளது.
ஆனால்இ அந்த தொலைபேசி பூத்தும் தற்போது அகற்றப்பட உள்ளது. இம்மாத இறுதியில் அகற்றப்பட உள்ள அந்த தொலைபேசி பூத்இ பெர்னிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஆசிரியர் - Editor II