1000

இந்தியாவில் தொடரும் சோகம்- ஆழ்துளை கிணற்றில் பலியான 5 வயது சிறுமி!

இந்தியாவில் தொடரும் சோகம்- ஆழ்துளை கிணற்றில் பலியான 5 வயது சிறுமி!
இந்தியாவின் ஹரியாணா மாநிலம் கர்னல் மாவட்டம் ஹர்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த 5 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார்.
5 வயது சிறுமி ஷிவாணி நேற்று 50 அடி ஆழ குழிக்குள் விழுந்த நிலையில்இ அருகில் பள்ளம் தோண்டி அவரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
அந்தவகையில் இன்று காலை சிறுமி மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும்இ அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதேவேளை கடந்த வாரம் தான் தமிழகத்தில் சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அதேபோன்று மீண்டுமொரு சம்பவம் ஹரியாணாவில் இடம்பெற்றுள்ளமை மக்களை பெரும் கவலையடையச் செய்துள்ளது.
ஆசிரியர் - Editor II