1000

சபரிமலை தீர்ப்பு பெண்களின் அடிப்படை உரிமையுடன் தொடர்புடையது- பினராயி விஜயன்

சபரிமலை தீர்ப்பு பெண்களின் அடிப்படை உரிமையுடன் தொடர்புடையது- பினராயி விஜயன்
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புஇ பெண்களின் அடிப்படை உரிமையுடன் தொடர்புடையது என்பதால் மாநில அரசு அதனை செயற்படுத்துமென கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்  16ஆம் திகதிஇ மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட உள்ளமையினால்இ இது தொடர்பான விவாதம் கேரளா சட்டப்பேரவையில் நடைபெற்றது.
இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்  ஜல்லிக்கட்டு போன்று சபரிமலை விவகாரத்தில் மாநில அரசால் அவசர சட்டம் கொண்டு வரமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென கடந்த வருடம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரளா அரசு செயற்படுத்த முயன்றதால்இ அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள்  தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor II