ஹீரோ பட பாடலின் விபரம்!

ஹீரோ பட பாடலின் விபரம்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'ஹீரோ' திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் சிங்கிளான 'மால்டோ கித்தாப்புலே' பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இந்த பாடல் வரும் நவம்பர் 7ம் திகதி வெளியாகும் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளார்.
டங்கா மாரி ஊதாரிஇ ஆளுமா டோலுமா பாடல்களை எழுதிய கானா பாடலாசிரியர் ரோகேஷ்இ இந்த 'மால்டோ கித்தாப்புலே' பாடலை எழுதியுள்ளார்.
டங்கா மாரிஇ ஆலுமா டோலுமாஇ சிம்டாங்காரன்இ புள்ளிங்கோ என தமிழ் சினிமாவில் புதிது புதிதாக வார்த்தைகள் பாடல்களாக மாறி வருகிறது.  இப்படி புதியதாக வரும் வார்த்தைகள் பாடல்களை ஹிட்டாக்குவது மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும்இ ஆர்வத்தையும் அதிகரிக்கிறது.
சமீபத்தில் வெளியான பிகில் படத்தின் வெறித்தனம் பாடலில் வந்த 'புள்ளிங்கோ இருக்காங்க வேறு என்ன வேணும்' என்ற வரிகளில் வந்த புள்ளிங்கோ என்ற வார்த்தைஇ சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றது.
தற்போது சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் ஃபெர்ஸ்ட் சிங்கிள் லிரிக்ஸ் 'மால்டோ கித்தாப்புல்லே' பாடல் வரிகள் புள்ளிங்கோவுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இரும்புத்திரை' இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
கல்யாணியுடன் 'நாச்சியார்' பட நடிகை இவானாஇ ஆக்ஷன் கிங் அர்ஜுன்இ ரோபோ ஷங்கர்இ அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 20ம் திகதி வெளியாகவுள்ளது.


ஆசிரியர் - Editor II