1000

நீட் தேர்வு குறித்து நீதிமன்றம் வெளிப்படுத்திய உண்மை – வைகோ அறிக்கை!

நீட் தேர்வு குறித்து நீதிமன்றம் வெளிப்படுத்திய உண்மை – வைகோ அறிக்கை!
நீட் தேர்வை இரத்துச் செய்ய வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 'நீட் தேர்வு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
நீட் தேர்வு என்பது ஒடுக்கப்பட்டஇ பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதை தடுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது.
அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 4ஆம் திகதி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் உள்ள தகவல்களை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இலட்சக் கணக்கில் செலவு செய்து நீட் தேர்வு எழுத தனிப் பயிற்சி பெற முடியாத நிலையில்இ மருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது என்ற உண்மையை நீதிபதிகள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவேஇ நீட் தேர்வை இரத்துச் செய்ய வேண்டும்' என வைகோ அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் - Editor II