எஸ்.பி திசாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்!

எஸ்.பி திசாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்!
கினிகத்ஹேன – பொல்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்ததாகக் கூறப்படுகின்ற சம்பவம் காரணமாகவே அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்இ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் - Editor II