20 முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சரவை அனுமதி!

20 முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சரவை அனுமதி!
புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
பட்டப்படிப்பை நிறைவு செய்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கே இவ்வாறு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்காக தேசிய கொள்கைஇ பொருளாதார விவகாரம்இ மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்புஇ வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்த 20 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
ஏற்கனவேஇ புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த 65 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II