1000

தீக்கிரையான குடியிருப்பு: மீட்புக்குழுவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தீக்கிரையான குடியிருப்பு: மீட்புக்குழுவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்று தீக்கிரையானதில்இ 79 வயது பெண்மணி ஒருவர் மூச்சுத்திணறி மரணமடைந்துள்ளார்.
பெர்ன் மண்டலத்தின் குசநiடிரசப பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்று செவ்வாய்க்கிழமை மாலை திடீரென்று தீக்கிரையாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் புகை மூட்டத்திற்கு நடுவே மயக்கமடைந்த நிலையில் 79 வயது பெண்மணி ஒருவரை மீட்டுள்ளனர்.
உடனடியாக அவருக்கு மருத்துவ உதவிகள் அளித்தும் அவரை மீட்டெடுக்க முடியவில்லை என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் சுமார் 20 பேரை அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு வெளியேற்றியுள்ளனர்.

ஆசிரியர் - Editor II