1000

மூன்று வேட்பாளர்களுக்கு 962 மில்லியன், கோட்டாவிற்கு மட்டும் 574 மில்லியன்!

மூன்று வேட்பாளர்களுக்கு 962 மில்லியன், கோட்டாவிற்கு மட்டும் 574 மில்லியன்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்இ பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனஇ புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய 3 பிரதான கட்சிகளினால் கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான செலவீனங்களை அந்த நிலையம் வெளியிட்டது.
குறித்த காலப் பகுதியில் மாத்திரம் மூன்று பிரதான கட்சிகளும் சுமார் 962 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படிஇ பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக 574 மில்லியன் ரூபாய் இந்த காலப் பகுதிக்குள் மாத்திரம் செலவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேபோன்று சஜித் பிரேமதாச போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி 372 மில்லியன் ரூபாய் குறித்த காலப் பகுதியில் மாத்திரம் செலவிட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க சார்பாக இந்த காலப் பகுதியில் 16 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணி ஆகியன ஒளிபரப்பு ஊடகத்திற்காகவே அதிகளவிலான செலவீனங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
35 வேட்பாளர்கள் மூன்று பிரதான வேட்பாளர்களின் செலவீனங்கள் இவ்வாறு இருக்கஇ ஏனைய வேட்பாளர்கள் ஒட்டு மொத்தமாக சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதாக அந்த நிலையம் கணித்துள்ளது.
இதன்படிஇ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க மற்றும் பெண் வேட்பாளரான அஜந்த பெரேரா ஆகியோர் சுமார் நான்கு மில்லியன் ரூபாயை தேர்தல் பிரசாரத்திற்காக செலவு செய்துள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏனைய வேட்பாளர்கள் மிகவும் சிறியளவிலான தொகையை செலவு செய்தேஇ தமது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் குறிப்பிடுகின்றது.
குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 60 வீதமான செலவீனங்களையும்இ புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 39 வீதமான செலவீனங்களையும்இ தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநுரகுமார திசாநாயக்க ஒரு வீதமான செலவீனங்களையும் மேற்கொண்டுள்ளனர்.


ஆசிரியர் - Editor II