1000

வேட்பாளர்களின் வாக்குறுதி! ஜனாதிபதி -மைத்திரி கடும் கண்டனம்!

வேட்பாளர்களின் வாக்குறுதி! ஜனாதிபதி -மைத்திரி கடும் கண்டனம்!
விவசாயத்துக்கான உரத்தை இலவசமாக வழங்கப்போவதாக ஜனாதிபதி வேட்பாளர்கள் கூறிவருவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளார்.
மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார். தமது கொள்கையின்படி இரசாயன உரம் மற்றும் மருந்துகள் பயன்படுத்துவது சரியான மார்க்கம் அல்ல.
எனவே தாம் அதற்கு எதிரானவன். இந்நிலையில் உரத்தை இலவசமாக வழங்குவதன் மூலம் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை
மாத்திரமே அதிகரிக்கமுடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை உரத்தை இலவசமாக கொடுப்பதை விடுத்து சிறுநீரகங்களை நாட்டுக்கு கொண்டு வரமுடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆசிரியர் - Editor II