ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய பிரதமரையே நியமிப்பேன் – சஜித் அதிரடி!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய பிரதமரையே நியமிப்பேன் – சஜித் அதிரடி!
ஜனாதிபதியாக தெரிவாகியவுடன்இ நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் நபரைஇ புதிய பிரதமராக நியமிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் ஒருமித்த கருத்து இல்லாமல் புதிய அரசியலமைப்பு செயற்படுத்தப்பட மாட்டாது என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.  நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியபோதே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் 'நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன் ஊழல் மோசடிகாரர்களுக்கும்இ போதைக் பொருள் விற்பனையாளர்களுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் எவ்வித மன்னிப்பும் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன்.
நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாதுகாப்பு வழங்கும் பிரபுக்கள் அரசியல் முறைமையை முழுமையாக இல்லதொழிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
ஒப்பந்தம் செய்பவர்களுக்கும்இ அடிப்படைவாதிகளுடனும் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்பைப் பேணுபவர்களுக்கும் அரசியல் ரீதியான ஒத்துழைப்பு கிடைக்ப் பெறுகின்றமையை அறிவேன்.
இந்த முறைமைகளை மாற்றியமைப்பதற்கு இளம்இ நிபுணத்துவம் மிக்கவர்களுடன் இணைந்து நேரடியாக செயற்பட தயாராக இருக்கின்றேன்.
அத்தோடு நாடாளுமன்ற வரையரைக்குள் மாத்திரமல்லாது மக்கள் ஆணையுடன் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்படுப்பதற்கு பாடுபடுவேன்.
மக்களின் விருப்பம் இன்றி அதனை ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டேன். மக்களின் ஆசீர்வாதத்துடன் புதிய நாட்டை கட்டியெழுப்ப முன்னோக்கிச் செல்ல இணைந்து பயணிப்பதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுகின்றேன்' என தெரிவித்தார்.


ஆசிரியர் - Editor II