1000

வாக்காளர்கள் இடையூறுகள் இன்றி வாக்களிக்க முடியும் – மஹிந்த!

வாக்காளர்கள் இடையூறுகள் இன்றி வாக்களிக்க முடியும் – மஹிந்த!
வாக்காளர்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாதவாறு வாக்கினை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்இ 'வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு சென்றுஇ தனக்கு கிடைக்கும் வாக்குச்சீட்டில் யாப்பில் கூறப்பட்டுள்ளது போன்று நமது சம்பிரதாய முறையில் புள்ளடி இட நினைக்கும் நபர்கள் புள்ளடி இட முடியும்.
அப்படி இல்லையாயின் தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு முன்னால் இலக்கம் ஒன்றினை குறிக்க முடியும்.
இலக்கத்தில் குறிக்க விரும்பம் இல்லை என்றால் புள்ளடி மாத்திரம் இட்டு வரவும் முடியும். வாக்கினை செலுத்தும் போது வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டினை குறுக்காகவே வைக்கக்கூடியதாக இருக்கும்.
(வாக்குச் சீட்டின் நீளம் காரணமாக) அதன் காரணமாக வாக்களிப்பதற்கு ஏற்ற முறையில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் - Editor II