உலக நாயகன் நிச்சயம் ஜனாதிபதியாவர் : வாழ்த்தும் முக்கிய பிரபலம்!

உலக நாயகன் நிச்சயம் ஜனாதிபதியாவர் : வாழ்த்தும் முக்கிய பிரபலம்!
உலக நாயகன் கமல்ஹாசன் ஒருநாள் ஜனாதிபதியாவார் எனவும்இ அனைவரும் ஜனாதிபதியாக கமல்ஹாசனை பார்ப்போம் எனவும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் பிறந்த நாள் நேற்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த பிறந்தநாள் கொண்டாடத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரபு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்இ எனது திரையுலக வாரிசு கமல் மட்டும்தான் என எனது தந்தை சிவாஜிகணேசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ஒரு நாள் ஜனாதிபதி ஆவார் என்றும் அனைவரும் ஜனாதிபதியாக கமலஹாசனை பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
கமலஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து அவர் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்று அவரது கட்சியின் தொண்டர்களும் ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில்இ பிரபு தெரிவித்துள்ள கருத்து தற்போது  மக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
ஆசிரியர் - Editor II