1000

யாழ். குழுவின் தீர்மானத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது ரெலோ தலைமை!

யாழ். குழுவின் தீர்மானத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது ரெலோ தலைமை!
கட்சியின் தலைமைக்குழு எடுத்த முடிவிற்கு மாறாக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் மீதும் அதற்கு ஆதரவாக செயற்படும் கட்சி அங்கத்தவர்கள் மீதும் கட்சியானது யாப்பு விதிகளுக்கமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர்  ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில்இ 'நேற்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட கிளையினால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியின் தலைமைகுழு எடுத்த தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவினை தெரிவித்துத் முடிவெடுத்து இதனை ஊடக அறிக்கையாக வெளியிட்டிருப்பதையும் அறிந்து கவலை கொள்கிறோம்.
ரெலோ தலைமைக் குழு எடுத்த தீர்மானம் கட்சியின் உறுதியான இறுதி முடிவாகும். இதில் எந்த வித மாற்று கருத்திற்கும் இடமில்லை. கட்சியின் இறுதி தீர்மானத்தை உதாசீனபடுத்திஇ நடைமுறைப்படுத்த தவறும் யாழ். மாவட்ட குழுவின் முடிவு எமக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தினை கடந்த செப்ரெம்பர் முதலாம் திகதி திருகோணமலையில் நடந்த கூட்டத்தின் போது கட்சியின் பொதுக்குழுஇ தலைமை குழுவிற்கு ஏகமனதாக வழங்கியிருந்தது.
அதன் பிரகாரம் கடந்த 6ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற தலைமைக் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என நீண்ட நேர விவாதத்தின் பின்னர் முடிவெடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதற்கு யாழ். மாவட்ட குழு எடுத்த முடிவானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. கட்சியின் தலைமைக் குழு எடுத்த முடிவிற்கு மாறாக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் மீதும் அதற்கு ஆதரவாக செயற்படும் கட்சி அங்கத்தவர்கள் மீதும் கட்சியானது யாப்பு விதிகளிற்கமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும். அதனைத் தொடர்ந்து அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்களா? இல்லையா? என்பது தொடர்பாக கட்சி தீர்மானிக்கும்' என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் - Editor II