ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரை!

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரை!
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் 47 உந்துருளிகளே இவ்வாறு தீ பரவியதில் எரிந்து நாசமாகியுள்ளனவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் நேற்று  இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளிவராத நிலையில்இ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆசிரியர் - Editor II