பிரதமரின் கோரிக்கைக்கு அமைய விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று!

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில் விசேட நாடாளுமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இன்று  முற்பகல் 11.30 மணிமுதல் முதல்இ பிற்பகல் 2.30 மணிவரை இந்த விசேட அமர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை கட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்இ விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய தவறுகள் குறித்த சட்டமூலம் குறித்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்படவுள்ளது.
கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரையடுத்துஇ எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.
எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில்இ இன்றைய தினம் சபை அமர்வை நடத்துதற்கு தீர்மானித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II