1000

முதலாவது இன்னிங்ஸ் முடிந்துவிட்டதுஇ இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம் – மனோ!

முதலாவது இன்னிங்ஸ் முடிந்துவிட்டதுஇ இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம் – மனோ!
புதிய ஜனநயாக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெறும் வரை நாம் ஓய மாட்டோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
காரணம் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் தான் மலையக மக்களுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம்   தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்இ 'சஜித் பிரேமதாச வெற்றியின் பின்னர் தோட்டத்தொழிலாளர்கள் என்ற பெயரை மாற்றி மலையக தமிழ் விவசாயிகள் என்ற அடையாளத்தை நண்பர் சஜித் பெற்றுக்கொடுப்பார்.
ஆகவே எங்களது முதலாவது இனிங்ஸ் முடிந்து விட்டது. இனி இரண்டாவது இனிங்ஸ் ஆரம்பிக்கப்படவுள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்துடன்இ இரண்டாவது இன்னிங்ஸில் சொந்த காணியில்இ சொந்த வீட்டில் தோட்டத் தொழிலாளர்கள் கௌரவத்துடன் வாழ வைப்பதற்கு சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுப்பார். அமைச்சர் திகாம்பரம் உங்களுக்கு கௌரவத்தினை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு வருகிறார்.
அதனால் அவருடன் ஆயிரக்கணக்கான தம்பிகள் இருக்கிறார்கள். அவரை பாதுகாக்க ஒரு அண்ணனும் இருக்கிறார். அது வேறு யாருமல்ல மனோ கணேசன் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர் - Editor II