1000

கேரள முதலமைச்சர் வேடத்தில் நடிகர் மம்முட்டி!

கேரள முதலமைச்சர் வேடத்தில் நடிகர் மம்முட்டி!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வரும் நடிகர் மம்முட்டியின் தோற்றம் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் படத்தின் முதல் தோற்றம் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்க்கையை '1' என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக உருவாகின்றது. இந்த படத்தில் பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார்.
சந்தோஷ் விஸ்வநாத் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகின்றது.
இதில் ஸ்ரீனிவாசன்இ ஜோஜூ ஜார்ஜ்இ உன்னி கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 50 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாராவதாக கூறப்படுகிறது.
பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தெலுங்கில் வெளியான யாத்ரா படத்தில் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்தார். இதன் மூலம் ஆந்திர ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
ஆசிரியர் - Editor II