1000

கடைக்குள் திருட்டில் ஈடுபட்ட பெண்மணி!

கடைக்குள் திருட்டில் ஈடுபட்ட பெண்மணி!
சுவிட்சர்லாந்தில் வணிக வளாகங்களில் திருடும் கும்பலை கண்டுபிடிப்பதில் நிபுணரான கிறிஸ்டியன் ஹூபர் தமது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ளுவ. புயடடநn மண்டலத்தில் குடியிருக்கும் கிறிஸ்டியன் ஹூபர் கடந்த 24 ஆண்டுகளாக வணிக வளாகங்களில் நடந்தேறும் திருட்டை ஒழிக்க துப்பறிவாளராக செயல்பட்டு வந்துள்ளார்.
தற்போது தமது நெடிய அனுபவங்களை புத்தகமாக தொகுத்து வெளியிட முடிவு செய்துள்ளார்.
அதில்இ ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். சம்பவத்தன்று கடை ஒன்றில் பெண்மணி ஒருவர் திருட்டில் ஈடுபடுவதை ஹூபர் கவனித்துள்ளார்.
அவர் அந்த கடையைவிட்டு வெளியேற இருந்த நிலையில்இ ஹூபர் அவரை மடக்கியுள்ளார். தாம் திருட்டில் ஈடுபடவில்லை என வாதிட்ட அவர் திடீரென்று தமது மொத்த ஆடைகளையும் அவிழ்த்து நிர்வாணமாக நின்றுள்ளார்.
இது அவரது திட்டம் எனவும்இ இந்த தருணத்தில் அங்கிருப்பவர்களின் கவனம் குறித்த பெண்மணியிடம் இருக்கையில்இ அவரது கணவர் திருட்டில் ஈடுபதுவது வழக்கம் என ஹூபர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அந்த சம்பவத்தில் குறித்த தம்பதிகளை தாம் விட்டுவிடவில்லை எனவும்இ அவர்களின் திருட்டை கையும் களவுமாக பிடித்ததாகவும் ஹூபர் தெரிவித்துள்ளார்.
தற்போது 73 வயதாகும் கிறிஸ்டியன் ஹூபர் தமது அனுபவங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளார்.
ஆசிரியர் - Editor II