1000

ஹீரோ' திரைப்படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!

ஹீரோ' திரைப்படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!
சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'ஹீரோ' படத்துக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோஇ வேலைக்காரன்இ சீமராஜா படங்களைஇ 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்த ஆர்.டி.ராஜாஇ ஹீரோ' படத்திதற்காக டிஆர்எஸ் பிலிம்ஸ் எனும் நிறுவனத்திடம் இருந்து கடந்த ஆண்டு 10 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்ததாகவும் ஆனால் அதனை திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே பணச் சிக்கல் எழுந்ததால்இ தான் தயாரித்து வந்த 'ஹீரோ' படத்தை ஆர்.டி.ராஜாஇ கேஜேஆர் பிலிம்ஸுக்கு அதை கைமாற்றினார்.
தங்களுக்கு தெரியாமல் 'ஹீரோ' படத்தை வேறு நிறுவனத்திடம் விற்றுவிட்டுஇ தங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டதாக டிஆர்எஸ் பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இதனால் 'ஹீரோ' உள்ளிட்ட 24ஏஎம் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் வெளியீட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.
இந்த வழக்கு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம்இ 'ஹீரோ' படத்தை வெளியிட இடைக்காலத் தடைவிதித்து தீர்ப்பளித்தது.
இதேவேளை டிசம்பர் 20 ஆம் திகதி படத்தை வெளியிட 24 ஏஎம் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor II