1000

ஜனாதிபதி கோத்தபாயவிடம் அமெரிக்கா முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை!

ஜனாதிபதி கோத்தபாயவிடம் அமெரிக்கா முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை!
மனித உரிமைகள் மற்றும் பொறுப்பு கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவிற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை இராஜாங்க செயலாளர் Mike Pompeo இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையிலேயேஇ அமெரிக்க வெளியுறவுத்துறை இராஜாங்க செயலாளர் Mike Pompeo இவ்வாறு கூறியுள்ளார்.
'இலங்கையில் இடம்பெற்ற ஜனாநாயகமிக்க தேர்தலுக்கு அமெரிக்கா வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது. அதேநேரம் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படவும் தயாராக இருக்கின்றோம்.
பாதுகாப்புஇ பொறுப்புகூறல்இ மனித உரிமைகள் மற்றும் வன்முறைகள் மீள நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் புதிய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுகின்றோம்.
இலங்கை ஒரு மதிப்பு மிக்க நாடாகும். இந்நிலையில் இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றோம்' என அவர் மேலும் கூறியுள்ளார்.


ஆசிரியர் - Editor II