1000

ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்த அதிரடி உத்தரவு!நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி !!

ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்த அதிரடி உத்தரவு!நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி !!
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிறப்பித்த முதல் உத்தரவிலேயே 100 மில்லியன் ரூபா செலவு தடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபயஇ தனது பதவி பிரமாணத்தின் போது இ அரச நிறுவனங்களில் எந்தவொரு அரச தலைவர்களின் புகைப்படங்களையும் காட்சிப்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டார்.
தனது புகைப்படமோஇ பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர்களின் புகைப்படங்களை அரச நிறுவனங்களில் காட்சிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவித்தார்.
பொதுவாக புதிய அரசாங்கம் அல்லது ஜனாதிபதி தெரிவாகியவுடன்இ அமைச்சுஇ அரச நிறுவனங்களில் புகைப்படங்கள் மாற்றமடையும். இதற்காக 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணம் செலவாகும்.
எனினும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டவுடன் மேற்கொண்ட இந்த தீர்மானத்தினால் அநாவசிய நிதி தவிர்க்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த அதிரடி உத்தரவு குறித்து நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரியவருகிறது.
ஆசிரியர் - Editor II