1000

பதவியினை இராஜினாமா செய்கின்றார் ரணில்?

பதவியினை இராஜினாமா செய்கின்றார் ரணில்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும்இ ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போதுஇ ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா அல்லது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வதா என்பது குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளைஇ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகியதும் 15 பேர் கொண்ட காபந்து அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன்இ நாடாளுமன்றத் தேர்தலையும் உடனடியாக நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் பல முக்கிய அமைச்சர்கள் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆசிரியர் - Editor II