1000

இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் செய்யும் இளைஞன்- ஏன் தெரியுமா?

இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் செய்யும் இளைஞன்- ஏன் தெரியுமா?

பசுமை வளநலன் காப்பும் சிறுவர் பாதுகாப்பும் வேண்டி தமிழ்நாட்டு இளைஞரான சுப்பிரமணி சுந்தர் அவர்களால்  13,500
கிலோமீட்டர் தூரங்கள் கொண்ட மிதிவண்டிப்பயணத்தை 02.11.2019 அன்று ஆரம்பித்துள்ளார்.இப்பயணம் இந்தியதேசத்தை வலம் வருவதாக நூற்றிஐம்பது நாட்கள் கொண்டதாக அமைகின்றது.பசுமைவளங்களை காப்பதின் அடையாளமாக பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் மரம் ஒன்றை நடுகை செய்தபின்னரே தனது வெற்றிப்பயணத்தை ஆரம்பித்தார்.இவரது இப்பயணம் தொடர்பாக கேள்விப்பட்டதும் அவரைத்தேடி தொடர்பு கொண்டு உரையாடினேன்.மிகவும் மகிழ்ச்சியோடு  தனது நிலவரங்களை தெரிவித்தார்.எமது சிந்தனைகள் ஒரேநிலைப்பாட்டில் இருப்பதால் அவருடயை பயணத்தின் தார்மீகத்தன்மைகளை என்னால் உணரமுடிகின்றது.எனவே எமது கழகம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவரது நண்பர் செல்வராஐா வைகுந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆசிரியர் - Editor II