1000

சிக்கலில் இருந்து மீண்ட சிவகார்த்திகேயன்!

சிக்கலில் இருந்து மீண்ட சிவகார்த்திகேயன்!
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' படம் சிக்கலில் இருந்து மீண்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்து 2 மாதங்களுக்கு முன்னர் திரைக்கு வந்த 'நம்ம வீட்டு பிள்ளை' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதில் அர்ஜுன்இ கல்யாணி பிரியதர்ஷன்இ இவானாஇ ஷ்யாம் கிருஷ்ணன்இரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வித்தியாசமான புரமொஷனில் களமிறங்கியுள்ள ஹீரோ படக்குழு பிரத்யேக வீடியோ கேம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனிடையே இந்த படத்துக்கு எதிராக டி.எஸ்.ஆர். பட நிறுவனம் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது.
கடனாக பெற்ற ரூ.10 கோடியை 24 ஏஎம் பிலிம்ஸ் நிறுவனம் வட்டியுடன் திரும்பி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து ஹீரோ படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதன் பின்னர் ஹீரோ படத்துக்கும் 24 ஏஎம் பட நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்று கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிக்கை வெளியிட்டது.
எனினும் இந்த பிரச்சினை குறித்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. தற்போது இதில் சுமுக முடிவு ஏற்பட்டுள்ளதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
குறித்த பதிவில் 'டி.எஸ்.ஆர். பட நிறுவனத்திடம் பேசி ஹீரோ படம் சம்பந்தமான சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. டிசம்பர் 20ஆம் திகதி ஹீரோ படம் திரைக்கு வரும். இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன' என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் - Editor II