ஈழ மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்: பிரபாகரன் பிறந்தநாளில் ராமதாஸ்!

ஈழ மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்: பிரபாகரன் பிறந்தநாளில் ராமதாஸ்!
ஈழ மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும் என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டுஇ பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக நே;றைய தினம் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்இ 'பின்வாங்கா போர்த்திறன்இ அறம் வழுவா ஆட்சி திறன்இ மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன் பிரபாகரனுக்கு 65ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள்.
படைகளால் மட்டுமின்றிஇ பழக்க வழக்கங்களாலும் சீரழிந்து கிடக்கும் தமிழீழத்தை சீரமைத்துஇ சிறப்பான ஆட்சி வழங்குவதே புலிகளின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதையாகும்.
மாவீரர்கள் மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மொழிஇ கலாச்சாரஇ பண்பாட்டு சீரழிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவைஇ தாங்கிக் கொள்ள முடியாதவை.
இந்த சீரழிவுகளை சரி செய்து தமிழர்களின் உன்னதஇ அறம் சார்ந்த வாழ்க்கை முறையை மீட்டெடுக்கவாவது அந்த மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ஆசிரியர் - Editor II