1000

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற கொள்ளையர்கள்..!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற கொள்ளையர்கள்..!!
தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. மீனவர். இவரது மனைவி வாணி (வயது40). கணவன்- மனைவி இருவரும் நேற்று மாலை புதுவை சென்று விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
நோனாங்குப்பம் பாலத்தில் வந்தபோது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்து 2 கொள்ளையர்கள் திடீரென கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்தனர். பின்னர் வாணி கழுத்தில் அணிந்திருந்த 2 1ஃ2 பவுன்செயினை பறித்தனர். கிருஷ்ணமூர்த்தியும் அவரது மனைவி வாணியும் திருடன்.... திருடன் என அலறுவதற்குள் கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். பறிபோன செயினின் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும்.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தி தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியர் - Editor II