1000

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை..!!

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை..!!
திருப்பூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் பிரகாஷ் (29). இவர் பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன் பிரகாசின் தந்தை தேவராஜ் உடல் நலக்குறைவால் இறந்தார். இதனை தொடர்ந்து பிரகாஷ் விரக்தியில் இருந்தார். நண்பர்கள்இ உறவினர்களிடம் பேசாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியர் - Editor II