1000

யாழ்.கொக்குவில் பகுதியில் ரவுடிகளைபோல் விக்கெட்டுகள், கம்பிகள், வயா்களுடன் றோட்டில் நின்று வீரம் காட்டிய பொலிஸாா்..!

யாழ்.கொக்குவில் பகுதியில் ரவுடிகளைபோல் விக்கெட்டுகள், கம்பிகள், வயா்களுடன் றோட்டில் நின்று வீரம் காட்டிய பொலிஸாா்..!

கொக்குவில்- பொற்பதி வீதியில் விக்கெட்டுகள், கம்பிகள், வயா்களுடன் நின்ற பொலிஸாா் பொதுமக்களின் முகங் களுக்கு டோா்ச் வெளிச்சத்தை பாய்ச்சி சோதனை நடாத்துவதாகவும், ரவுடிகளை விட மோசமாக அவா்கள் நடந்து கொள்வதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். 

இன்று இரவு 8.30 மணி தொடக்கம் இடம்பெற்றது. கொக்குவில் பொற்பதிச் சந்தியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஆறு பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் கைகளில் விக்கெட்டுக்கள், வயர்கள் உள்ளிட்டவையும் காணப்பட்டன.


 
வீதியால் பயணிப்போரின் முகத்துக்கு ரோச் லைற் அடித்து மறித்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பொலிஸாரின் இந்த நடவடிக்கை தொடர்பில் வீதியால் பயணிப்போர் அச்சத்துடன் காணப்பட்டனர்.இருட்டான பகுதியில் நின்று திடீரென வந்து வீதியில் பயணிப்போரின் முகத்திற்கு  

பொலிஸார் ரோச் அடித்ததனால் சிலர் நிலைகுலைந்தனர். அவர்களில் சிலர் பொலிஸாருடன் முரண்பட்டனர் என்பதையும் காண முடிந்தது. எனினும் அந்தப் பகுதியில் ரௌடிகளின் நடமாட்டம் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அவ்வாறு சுற்றுக்காவல் 

நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர் - Shabesh