1000

சூரியகட்டைக்காட்டு குளம் உடைப்பெடுத்தமையாள் 133 குடும்பங்களைச் சேர்ந்த 629 பேர் பாதிப்பு ..

சூரியகட்டைக்காட்டு குளம் உடைப்பெடுத்தமையாள் 133 குடும்பங்களைச் சேர்ந்த 629 பேர் பாதிப்பு ..
வடக்கில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலையால் மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள சூரியகட்டைக்காட்டு குளம் உடைப்பெடுத்தமையாள் 133 குடும்பங்களைச் சேர்ந்த 629 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

வடக்கின் பல பாகங்களிலும் கடந்த இரு நாட்களாக பொழியும் மழை வீழ்ச்சியின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 150 மில்லி மீற்றர் மழை பொழிந்துள்ளமையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாகவே குறித்த குளம் உடைப்பெடுத்துள்ளது.

இதேநேரம் மன்னார் மாவட்டத்தில் எற்பட்ட மழைப் பொலிவின் காரணமாக மன்னார் மாவட்டத்தின் மிகப் பெரும் குளமான கட்டுக்கரை குளமானது அதன் கொள் அளவினை தொட்டுள்ளது.

இதளநேரம் முல்லைத்தீவில் ஏற்பட்ட மழை வீழ்ச்சியின் காரணமாக மெத்தையன் கட்டுக் குளமானதெ அதன் கொள் அளவான 24 அடியில் 17 அடியை தொட்டுள்ள அதேநேரம் உடையார்கட்டுக் குளமானது வான்பாயும் நிலையினை எட்டுயுள்ளது. இருப்பினும் வவுனிக் குளத்திற்கான போதிய நீர் வரத்து ஏற்படவில்லை.

இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளமானது நேற்று மாலை 7 மணுயளவில் 23.2 அடி நீர் வரத்து ஏற்பட்டிருந்த அதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வீழ்ச்சியினையடுத்து தொண்டமானாறு கடல் நீர் ஏரியின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் - Shabesh