1000

க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்!

க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்!
2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த பரீட்சைகள் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை)  முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இம்முறை  7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ளனர்.
பரீட்சை நாளாந்தம் காலை 8.30க்கு ஆரம்பமாகவுள்ளதுடன் பரீட்சார்த்திகள் அரை மணி நேரத்திற்கு முன்னராக பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தரா தர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைக்கு தோற்றலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக கிடைக்கப்பெறும் சகல முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக விசேட விசாரணை குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 26ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II