1000

ட்ரோன் கமராவை பறக்கவிட்ட நபர் கைது!

ட்ரோன் கமராவை பறக்கவிட்ட நபர் கைது!
நுவரெலியா-மீபிலிமான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கமராவை பறக்கவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலிய பொலிஸ் நிலைய விசேட அதிரடிப்படைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்துஇ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சேனாநந்த வித்தியாலய பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு அல்லது சிவில் விமான சேவை ஆணைக்குழுவின் அனுமதியின்றியே குறித்த நபர் ட்ரோன் கமராவை பறக்கவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்இ அவரிடமிருந்த ட்ரோன் கமரா மற்றும் அதன் உதிரிப்பாகங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.ஆசிரியர் - Editor II